Monday 14 October 2013

எந்தெந்த இணையதளத்தில் என்னென்ன தமிழ் நூல்கள் கிடைக்கும் பார்க்கலாம் வாங்க...


நன்றி:http://www.thamizham.net/friends.htm


நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள், ஆய்வேடுகள் எனத் தமிழில் வெளிவந்த அனைத்தையும் அப்படியே பாதுகாக்கிற உயரிய முறையின் வழி - படவடிவக் கோப்புகளாக்கிப் பாதுகாக்கிறது. இதுவரை 4,000 க்கும் மேற்பட்ட பதிவுகளைச் செய்துள்ளது. நூலகத்தில் உள்ள அயலக மின்னூல்கள் என்ற தொடுப்பானது உலகம் முழுவதும் நூல்களைப் பாதுகாக்கிற இணைய தளங்கள் பற்றிய செய்தியைச் சொல்லுகிறது. நூலகத்தில் உள்ள இதழ்களையும் நூல்களையும் யார் வேண்டுமானாலும் இலவசமாக வலையிறக்கிக் கொள்ளும் வகையில் வைத்திருப்பது வணங்குதற்குரிய செயல். ஈழமண்ணிலிருந்து வெளிவந்த அனைத்தையும் திரட்டிப் பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் இந்த இணையதளம் வாழ்த்துதற்குரியதே.

பார்க்க; http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D




"மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்" என்பது உலகலாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும், தமிழார்வலர்களும் பெற வசதிசெய்யும் திட்டம். 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் 400 க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களைத் தட்டச்சு செய்து படிவடிவக் கோப்புகளாக்கி இணையத்தில் வைத்துள்ளது. சங்க நூல்களில் பல இந்த வகையில் மின்நூல்களாக்கப் பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் இலவசமாக வலையிறக்கிக் கொள்ளும் வகையில் இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளது வணங்குதற்குரிய செயல்.

பார்க்க;  http://www.tamil.net/projectmadurai




இந்திய மொழிகளில் வெளிவந்த நூல்களைத் தொகுத்துள்ள அரிய முயற்சி இது. தமிழில் வெளிவந்த1617 வகையான நூல்களை (4,11,723 பக்கங்களை) இந்த இணையத்தில் இணைத்துள்ளது. நூல்களை இலவசமாக இணையத்தில் மட்டுமே பார்க்க முடியும். வலை இறக்க முடியாது. இணையத்தில் நுழைந்து, நூல்களைக் காணுவதற்குரிய செயலிலை வலையிறக்கி நமது கணினியில் பதிவு செய்து கொண்டு, மொழிப் பட்டியலில் தமிழைத் தேர்வு செய்து சொடுக்கினால், புத்தகத்தின் பட்டியல் தோன்றும். பட்டியலில் விரும்புவதைத் தேர்வு செய்து உள்நுழைந்தால் புத்தகத்தைக் காணலாம். வைத்திய ரத்தினச் சுருக்கம் போன்ற அரிய நூல்களும் உள்ளன.

பார்க்க; http://www.dli.ernet.in/




வைணவ இலக்கியத்தின் நூல்கள் படவடிவக் கோப்புகளாகவும், பாடல்களாகவும், படக்காட்சித் தொகுப்பு களாகவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. கிடைத்தற்கரிய 300 க்கு மேற்பட்ட நூல்கள் இதில் உள்ளன. வைணவ சந்தியா வந்தனம், லோகாச்சாரியார் புத்தகங்கள், வைணவ சம்பிரதாய வியாக்கியானம், 4000 திவ்யப்பிரபந்தம், வேதாந்த தேசிகர் பிரபந்தம், பாகவதம், வைணவ இதழ்கள் (ராமானுஜம், அமிர்தலகரி, வைணவம், அரிசமய திவாகரம்) என ஏராளமான புத்தகங்கள் இந்த வலையில் இலவசமாக இறக்கும் வகையில் உள்ளன. அனைத்து வகையான புதிய பதிவுகளும் தொடர்ந்து செய்யப் படுகின்றன. இந்த வலையின் முயற்சி வியப்பூட்டுகிறது. வாழ்த்துகிறோம்.

பார்க்க; http://www.maransdog.com/



தமிழ் மரபு அறக்கட்டளை. தமிழ் மொழியின் நுட்பத்தைப் பாதுகாக்கும் நோக்கொடு இயங்கிவரும் அமைப்பு. 2001 டிசம்பரில் கொங்கன் படை என்ற நூலை மின்பதிவு செய்து இதன் பயணம் தொடங்கியது. இதுவரை அபிதான கோசம், கண்ணுக்குள் வெளி, எக்காளக் கண்ணி, கோதை நாச்சியார் தாலாட்டு என 90 க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை, மின்நூல்கள் ஆக்கி வலையேற்றியுள்ளது. இந்த மின்நூல்களை இலவசமாக வலையிறக்கலாம். நண்பர்களை இணைத்து இயங்கிட முன்னெடுத்துள்ள இவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.

பார்க்க; http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html


காந்தளகம். தமிழ் நூல்களின் வெளியீட்டிற்கான தரமான பதிப்பகமாக விளங்கும் இது தமிழ் நூல் என்கிற இணையதளம் வழி, இலவசமாக வலையிறக்கிட, மின் நூல்களையும் வைத்துள்ளது. தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள், பொங்கு தமிழ், தமிழர் கால்வாய், பறவைகள் எனத் தொடரும் இவைகள் 15க்கும் மேற்பட்டதாக உள்ளன. இந்த மின்நூல்களை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் படிக்கலாம், அச்சிடலாம், இணைய இணைப்பில் மட்டுமே பார்க்க இயலும். புதிய நூல்களை மின்நூலாக்கி வைத்துள்ளது வணங்குதற்குரிய செயலே. வணங்கி வாழ்த்துவோம்.

பார்க்க; http://www.tamilnool.com/e_book.php



வள்ளலார் நூல்கள் - அருட்பெருஞ்சோதி அகவல் முன்னுரை, அகவல் உரை, பாரதியாரும் வள்ளலாரும், புத்தரும் வள்ளலாரும், சின்மய தீபிகை என 30 வகையான நூல்களை மின் நூல்களாக்கப்பட்டு இந்தத் தளத்தில் உள்ளன. பார்வையாளர்கள் பெயரைப் பதிவு செய்து உறுப்பினர் ஆகி உள்நுழைந்தால் இலவசமாக வலையிறக்கலாம். உறுப்பினர் கட்டணம் இல்லை. நூல்கள் தட்டச்சு செய்யப்பட்டு படவடிவக் கோப்புகளாக மாற்றப் பட்டுள்ளன. சில நூல்கள் சரியான எழுத்துருக்களை இணைக்காததால் ஒழுங்காக வருவது இல்லை.

பார்க்க; http://www.vallalar.org/tamil/downloadlist/28



தமிழக அரசின் பாடத்திட்ட நூல்கள் - படவடிவக் கோப்புகள் பகுதி பகுதியாக வலையிறக்குமாறு வைக்கப்பட்டுள்ளன. இந்த வலைதளத்தில் 70 க்கும் மேற்பட்டவை மின் நூல்களாக்கப்பட்டு இலவசமாக வலையிறக்குமாறு வைக்கப்பட்டுள்ளன. முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் படவடிவக் கோப்புகளாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியர் பயிற்சிக்கான பாடப்புத்தகங்களும் உள்ளன. தற்பொழுது அரசு பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை கற்பித்தல் அட்டைகளின் வழியாகத் தானே கற்றல் முறையில் நடைபெறுகிறது.

பார்க்க; http://www.textbooksonline.tn.nic.in/




திரு ராமகலை அவர்களின் முயற்சியால் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில்275 க்கும் மேற்பட்டவை மின் நூல்களாக்கப்பட்டு இலவசமாக வலையிறக்குமாறு வைக்கப்பட்டுள்ளன. பகவத்கீதை, இராமாயணம், சிறுகதை, நகைச்சுவைத் துணுக்குகள் என தமி்ழில் வெளிவந்த நூல்களை, குறிப்புகளைப் படவடிவக் கோப்புகளாக்கி இணையத்தில் வைத்துள்ளது வாழ்த்துதற்குரியதே. உள்ளே நுழைய உங்கள் மின் அஞ்சலை குறிப்பிட்டுப் பதிவு செய்து கொண்டால் போதும். கட்டணம் ஏதும் இல்லை.

பார்க்க; http://search.4shared.com/q/ACA/1/tamil+pdf



சமணம் தொடர்புடைய தமிழ் நூல்கள் இந்தத் தளத்தில் உள்ளன. இதில் 18 க்கும் மேற்பட்ட நூல்கள், தட்டச்சு செய்து, மின் நூல்களாக்கி, இலவசமாக வலையிறக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. நாலடியார், நீலகேசி, திருநூற்றந்தாதி, அறனெறிச்சாரம், மேருமந்தர புராணம், திருவெம்பாவை, சமண துதிப்பாடல்கள், சமணம் அறிமுகம் என்பவை இத் தளத்தில் உள்ள நூல்களாகும்.

பார்க்க; http://www.jainworld.com/JWTamil/index.asp






நூல்களை ஒருங்குறியில்
இணையத்தில் மட்டுமே
படிக்க முடியும்.
150 க்கும் மேற்பட்ட
நூல்கள் உள்ளன.


பார்க்க; http://www.chennailibrary.com/ebooks/ebooks.html





தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் விக்கிப்பீடியா என்பது ஒரு தகவல் களஞ்சியமாகும். இதில் தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், புவியியல், அரசியல், தனிநபர்கள் என அனைத்துத் தகவல்களும் கொண்டதொரு தகவல் கருவூலமாகும். இதில் தகவல்களை யாவராலும் தொகுக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த வலைப்பக்கம்.

கீழே சொடுக்கிப் பார்க்கவும்.


நன்றி;http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

அறியப்படாத தமிழ் உலகம்

அறியப்படாத தமிழ் உலகம் எனும் இந்நூல் தமிழ் ஆய்வாளர்கள் மாணவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான நூல் ஆகும். தமிழுலகம் இதுவரை அறியாத பல தகவல்களை உள்ளடக்கிய முக்கியமான ஆவணமாக இந்நூலைப் பார்க்கலாம். இந்நூலை மேலும் படிக்க வேண்டுமெனில் கீழுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


நன்றி;http://books.google.co.in/books?id=lnyLSfJ0hcsC&pg=PP7&dq=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D&hl=en&sa=X&ei=ldtcUqOcA8yWrgeL-4GIBA&ved=0CDUQ6AEwAjgU#v=onepage&q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D&f=false

எளிய நடையில் தமிழ் இலக்கணம்

எளிய நடையில் தமிழ் இலக்கணம் நூலைப் படிக்க கீழுள்ள இணைப்பைச் சொடுக்கவும். இந்நூலில் தமிழ் இலக்கணக் குறிப்புகள் வினா விடை அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி;http://books.google.co.in/books?id=WXRkuAnw7CIC&printsec=frontcover&dq=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D&hl=en&sa=X&ei=0tlcUr_FDIiPrQeyl4CwAw&ved=0CDcQ6AEwAQ#v=onepage&q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D&f=false

கூகுள் புத்தகம்


கூகுளில் இலவசமாக நூல்களைப் பெற கீழுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
http://books.google.co.in/

தமிழ் நூல்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்

வகைகள்


Friday 11 October 2013

தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.
( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு)
முன்னுரை
கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது.  இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து, மேடைநாடகங்களாக மாறி, இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற தமிழ்நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரை மதிப்பீடு செய்கிறது.

தமிழ்நாடகத்தின் தொன்மை
·          தொல்காப்பியர் ”நாடக வழக்கினும்” என்று நாடகத்தைக் குறிப்பிடுகிறார்.
·          சிலப்பதிகாரம் நாடகக்கூறுகளுடன் நாடகக் காப்பியமாகவே திகழ்கிறது.
·    அகத்தியம்,குணநூல், கூத்தநூல், சயந்தம்மதிவாணர் நாடகத் தமிழர்,  முறுவல் போன்ற  நாடக நூல்கள்பழந்தமிழர் வழக்கில் இருந்தன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுச் செல்கிறார்.

சங்ககால கூத்துகள்
       குறவைக் கூத்து, துணங்கைக் கூத்து, ஆடிப்பாவை போன்ற கூத்துவகைகளை சங்ககாலத்தில் காணமுடிகிறது.

இருவகை நாடகங்கள்
       வேத்தியல், பொதுவியல் என நாடகங்களை இருவகையாகப் பகுக்கலாம். வேத்தியல் என்பது வேந்தனுக்காக நடித்துக்காட்டப்படுவதாகும், பொதுவியல் என்பது மக்களுக்காக நடித்துக்காட்டப்படுவதாகும்.

இருண்ட காலம்
       சமண, புத்த சமயங்கள் கலைகளுக்கு எதிராக செயல்பட்டதால் இருண்ட காலத்தில் நாடகத்தமிழ் ஒளியிழந்தது.

பல்லவர் கால நாடகங்கள்
       நாயன்மார்களும், ஆழ்வார்களும் இசைக் கலைக்கு உயிரூட்டினர். எனினும் நாடகத்துக்கு பெரிய செல்வாக்கு ஏற்படவில்லை. இக்காலத்தில் மகேந்திர வர்ம பல்லவனின் “மத்தவிலாச பிரகசனம்“ என்ற நாடகநூல் புகழ்பெற்றிருந்தது. இன்னிசைக்கூத்து, வரலாற்றுக் கூத்து என இருவகை நாடக மரபுகளும் இக்காலத்தில் இருந்தன.

சோழர் கால நாடகங்கள்
       சோழர் காலத்தில் இராஜராஜனின் வெற்றிச்சிறப்பைப் பாராட்டும் “இராஜராஜவிஜயம்“ நிகழ்த்தப்பட்டது. இதில் நடித்தவர்களுக்கு “ராசராச நாடகப்பிரியன் என்று பட்டம் வழங்கினர் என்பதைக் கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது.

தமிழ் நாடகத்தின் எழுச்சி
       இசுலாமியர் படையெடுப்புக்குப் பிறகு கலைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடகங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று வளரஆரம்பித்தன. குற்றாலக்குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரிதக் கீர்த்தனை ஆகிய நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றன.
·   காசி விசுவநாதமுதலியார் அவர்களின் டம்பாச்சாரி நாடகம் தான் முதன்முதலில் மேடையில் நடிக்கப்பட்ட சமூகநாடகமாகும்.
·   மேடைநாடக அமைப்புக்கு முன்மாதிரியான, நவாப் கோவிந்தசாமி ராவ் அவர்களை தமிழ்நாடகத்தின் தாத்தா என்று அழைப்பர்.

தமிழ் நாடக மூவர்         
       பம்மல் சம்பந்தம் முதலியார், சங்கரதாசு சுவாமிகள், பரிதிமாற் கலைஞர் ஆகிய மூவரையும் தமிழ்நாடக மூவர் என்று அழைப்பது வழக்கம்.
1.பம்மல் சம்பந்தம் – இவர் எழுதிய மொத்த நாடகங்கள் 93 ஆகும். இவரே தமிழ்நாடகத்தின் தந்தை என அழைகப்படுகிறார். மேலும் இவரைத் தமிழ் சேக்சுபியர் என்றும் அழைப்பர். இவர்தம் நாடகங்கள் இன்பியல், துன்பியல், கேளிக்கை, அங்கதம், நையாண்டி, புராணிகம், வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலதரப்பட்டவையாகும்.
2.பரிதிமாற் கலைஞர் – நாடகம் படித்தல், நடித்தல், இலக்கணம் வகுத்தல் என மூன்று பெரும் பணிகளை ஆற்றினார். நாடகவியல் என்ற தமிழ்நாடக இலக்கண நூலை இயற்றினார். இவர் படைத்த நாடகங்களுள் ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், சூர்ப்பனகை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.
3.சங்கரதாசு சுவாமிகள்- முறைப்படுத்தப்பட்ட தமிழ்நாடகவரலாறு இவரிலிருந்தே தொடங்குகிறது. இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையை நசிவடையாமல்க் காத்ததால் இவரைத் தமிழ்நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றுவர்.  அபிமன்யு சுந்தரி, இலங்காதிலகம், கோவலன், நல்லதங்காள், பிரகலாதன்  உள்ளிட்ட 40 நாடகங்கள் இவர் படைத்தவையாகும்.

தமிழ் நாடகக் குழுக்கள்
·          பம்மல் சம்பந்தம் முதலியார் – சுகுணவிலாச சபை
·          சங்கரதாசு சுவாமிகள் - சமரசசன்மார்க்க சபை
·          சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் – பாலமனோகரசபா
என்.எஸ்.கே, பாலாமணி அம்மையார், கே.பாலசந்தர், எஸ்வி.சேகர், விசு ஆகியோரும் நாடகக்குழுக்கள் வைத்து நாடகம் வளர்த்தனர்.

நாடகங்களின் வகை
       நாவல்களைப் போலவே தமிழ்நாடகங்களையும் புராண நாடகம், இலக்கிய நாடகம்  துப்பறியும் நாடகம், வரலாற்றுநாடகம், நகைச்சுவை நாடகம், மொழிபெயர்ப்பு நாடகம், தழுவல் நாடகம், என வகைப்பாடு செய்ய இயலும் சான்றாக புராண நாடகங்கள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைய தோன்றின.பிரகலாதன், ஐயப்பன், தசாவதாரம், சிறுதொண்டர் ஆகிய நாடகங்கள் அவற்றுள் குறிப்பித்தக்கனவாகும்.இலக்கிய நாடகங்களைப் படித்துமுடித்தவுடன் ஒரு நாடகம் பார்த்த நிறைவு கிடைக்கும். அவ்வகையில், சுந்தரம்பிள்ளையின் – மனோன்மணீயம், பாரதிதாசனின் – பிசிராந்தையார், மறைமலையடிகளின்- அம்பிகாபதிஅமாராவதி, அ.ச.ஞானசம்பந்தனின் தெள்ளாறு எறிந்த நந்தி முதலிய நாடகங்கள் இலக்கி்ய நாடகங்களுள் குறிப்பித்தக்கனவாகும்.

முடிவுரை

       இன்றை சூழலில் கல்விச்சாலைகளில் ஓரங்கநாடகம், நாட்டிய நாடகங்கள் நடித்துக்காட்டப்படுகின்றன, வார, மாத இதழ்களிலும், வானொலி தொலைக்காட்சிகளிலும் நாடகங்கள் நடித்துக்காட்டப்படுகின்றன. இன்று அதிகமான தொழில்நுட்பங்களோடு நிறைய படங்கள் வருகின்றன. இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்த மேற்கண்ட நாடகங்களையும் அக்கலையை வளர்த்த சான்றோர்களையும் தமிழுலகம் என்றும் மறவாது.


நன்றி; முனைவர் இரா. குணசீலன், மற்றும் www.http://thenkoodu.in